Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

Share this:

கொரோனா பெருந்தொற்று பலருடைய வாழ்க்கையை பெரிது புரட்டிப் போட்டு வாழ்வாதாரத்தைகேள்விக்குறியாக மாற்றியுள்ளது. கோவிட்-19 நோயின் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களுடைய இயல்பு வாழ்வை திரும்பச் செய்யும் முயற்சியாக, தேவையின்றி வெளியில் சுற்றக்கூடாது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல விதிமுறைகளை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பல கட்டுபாடுகளுடன் வணிக நிறுவனங்கள், காய்கறி சந்தைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனைகளை அரசு அனுமதித்துள்ளது.

இந்த பேரிடர் காலத்தில் தொழில் முடக்கத்தை சந்தித்துள்ள சாமானியர்கள் பலரும், தங்களது தொழிலை மேம்படுத்துவதற்காக புதுப்புது யுக்திகளை கண்டறிந்து வருகின்றனர்.  அப்படி ஆடுகள் விற்கும் தன் தொழிலை ஆன்லைன் மூலம் மாற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வணிகம் செய்கிறார் மஹாராஷ்ட்ரா ஜோகேஸ்வரியைச் சேர்ந்த “ஹாஜி ஆட்டு பண்ணை உரிமையாளர்” வாசிம் கான்.

இன்னும் சில தினங்களில் வர இருக்கும் பக்ரீத் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை சற்று சூடு பிடித்துள்ள நிலையில், கொரோனா ஒழிக்கும் பணிகளுக்கு துணை நின்று கூட்டம் சேராமல், ஆன்லைன் மூலம் ஆடுகளை விற்பனை செய்தும், அவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்தும் வருகிறார் வாசிம்கான்.

இது குறித்து வாசிம்கான் கூறும் பொழுது, “பக்ரீத் பண்டிகைக்கு தேவைப்படும் ஆடுகளை எங்களிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். எங்கள் ஆட்டு பண்ணையில் உள்ள ஆடுகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்துக் கொடுத்தால், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கொடுக்கும் முகவரியில் டெலிவரி செய்துக் கொடுக்கிறோம். இதனால் எங்கள் ஆட்டுப் பண்ணையில் மக்கள் கூட்டம் சேர்வது தவிர்க்கபடுகிறது. கொரோனா நோயிலிருந்தும் பாதுகாப்பும் கிடைக்கிறது” என்கிறார் அவர்.

 

அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக எத்தனை கட்டுபாடுகளை விதித்தாலும், மக்கள் அதை முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே அதன் பலனை அடைந்து கொரோனா நோய்க்கு எதிரான போரில் வெற்றிப் பெறமுடியும் என்பது மக்கள் உணர வேண்டிய நிதர்சனமான உண்மை.


Share this:

Related posts

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN