Newskadai.com
உலகம்

ஆத்தாடி எவ்வளவு பெரிசு… இப்படியொரு ராட்சத வவ்வால்களை பார்த்திருக்கமாட்டீங்க…!

Share this:

பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித அளவிலான ராட்சத வவ்வால்கள் உள்ளதாக அலெக்ஸ் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து தான் சில மாதங்களுக்கு முன் முகநூலில் பதிவிட்ட பதிவையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உண்மை என்றும் இந்த புகைப்படம் உறுதிப்படுத்துகிறது என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே பதிவிட்டிருந்த முகநூல் பக்கத்தில் இந்த ராட்சத வவ்வால்களின் இறக்கைகள் 1.7 மீட்டர் வரை நீளமுடையதாக இருக்கின்றது என்றும், அதி பயங்கரத் தோற்றத்தில் காணப்படும் இவ் வவ்வால்கள் பழங்களை மட்டுமே உண்ணும் சைவம் வகையைச் சேர்ந்தவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு ட்விட்டர்வாசிகளிடையே அதிக பேசு பொருளாக மாறியது. அந்த ட்வீட் நூற்றுக்கணக்கான் கருத்துகள் மற்றும், அதிக மறுபதிவுகளுடன், சுமார் 27 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலனவர்கள் இதை நம்ப மறுத்தும், பலர் இது உண்மைதான், நாங்கள் கண்டுள்ளோம் என்று பதிலளித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு ட்விட்டர் வாசி இந்த தகவல் உண்மைதான், தான் இது போன்ற ராட்சத வவ்வால்களை நேரில் கண்டதாகவும், அது பார்பதற்கு தான் பயங்கரமானவை ஆனால் மிகவும் மென்மையானவை என்று பதிவிட்டுள்ளார்.

இது போன்ற ராட்சத வவ்வால்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. இதுவே உலகின் மிகப்பெரிய வவ்வால் இனம். இவைகளை Giant Golden Crowned Flying Fox என்று அழைக்கப்படுகிறது. பார்பதற்கு பயமுறுத்துவதாக இருந்தாலும், அதிக பட்சம் ஒரு நாயின் உயரம் அளவில் வளரக்கூடியது, 1.5 மீட்டர் முதல் 1.7 மீட்டர் வரை இறக்கைகளுடன் 1.5கிலோ எடையுடன் காணப்படுகிறது.


Share this:

Related posts

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

தமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…

MANIMARAN M

60% வாக்குகளுடன் அமோக வெற்றி… இலங்கை தேர்தலில் ஜெயித்த ராஜபக்சே…!!

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M

இந்தியர்களுக்கு இனி வேலை இல்லை… அதிரடி உத்தரவு போட்ட அதிபர் ட்ரம்ப்…!!

MANIMARAN M