உலகம் முழுவதும் பல்லாயிரக்கனான பாடல்களை அவர் பாடுவார். நம் எதிர்கால சந்ததியும் அதை கேட்டு மகிழும். தயவு செய்து அனைவரும் இதை கடைபிடியுங்கள். – இயக்குநர் பாரதிராஜா
எஸ்.பி.பி.க்காக நாளை நடைபெற உள்ள கூட்டு பிரார்த்தனையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – இசைஞானி இளையராஜா
அவரை தட்டி எழுப்பி மீண்டும் பழைய வீரத்துடன் பழைய பாவனை உடன் பாட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
ஆயிரம் நிலவே வா என பாடியவர். ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா?… கேவலம் இந்த கொரோனாவுக்காக அவரை பலியாக விடக்கூடாது. எனவே ஒரு நிமிடம் அவருக்காக வேண்டுவோம் – நடிகர் விவேக்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி நாளை மாலை 6 மணிக்கு நடக்க உள்ள ஒரு நிமிடம் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
Let’s come together and pray for speedy recovery of legendary singer SPB. Be a part of mass prayers on 20 August, 6 pm from your respective places. Let’s make sure that his voice is heard again. #GetWellSoonSPBSIR pic.twitter.com/SWcuHScaTA
— G.V.Prakash Kumar (@gvprakash) August 19, 2020
நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி.சார் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரலும் ஒரு முக்கியமான காரணம். உங்களுடைய குரலை மறுபடியும் கேட்க வேண்டும். நான் 100 படங்களில் கதாநாயகனாக நடித்ததற்கு உங்களுடைய குரலையும் நான் ஒரு முக்கிய காரணமாக நினைக்கிறேன். நீங்க விரைவில் குணமடைய வேண்டும் என பொது நலத்துடனும், கொஞ்சம் சுயநலத்துடனும் வாழ்த்துறேன். சீக்கிரம் குணமடைந்து வந்துவிடுங்கள் பாலு சார் என வாழ்த்து கூறியுள்ளார்.