Newskadai.com
விளையாட்டு

“மற்ற ஐபிஎல்-யை விட இது ரொம்ப ஸ்பெஷலானது”… புது விளக்கம் கொடுத்த பாஜக எம்.பி…!

Share this:

இந்திய ஐபிஎல் தொடர் என்பது கோடிகளைக் கொட்டி நடத்தப்படும், கோடிகளில் வருமானத்தை பார்க்கும் பணக்கார கிரிக்கெட் தொடர் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா (covid-19) பெரும் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்தியாவில், இவ்வாண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது இயலாமல் போனது பிசிசிஐக்கு. எனினும் ஐபிஎல் தொடரை எப்படியும் நடத்தியே தீருவது என்பது பிசிசிஐயின் முடிவு.

இத்தொடரை நடத்தாவிட்டால் ஒளிபரப்பு உரிமை, விளம்பர நிறுவனங்களுடன் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களால் பிசிசிஐக்கு 4000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என்பது செய்தி எனவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெளிநாட்டில் நடத்த தீர்மானித்தது பிசிசிஐ. பல நாடுகள் ஐபிஎல் தொடரை நடத்த முன்வந்த போதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்தது பிசிசிஐ.

செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து பாஜக எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் “முந்தைய ஐபிஎல் தொடர்களை விட கடினமான சூழலில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர் மிகச் சிறந்ததாக அமையும். ஏனெனில் இது தேசத்திற்காக நடைபெறும் போட்டி. இந்த ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்த தேசத்தின் மனநிலையும் மாறப்போகிறது” என்று தெரிவித்தார்.


Share this:

Related posts

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…!!

AMARA