Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

Share this:

ஆண்டு தோறும் ஆடி அம்மாவாசையை அடுத்த 5வது நாள் பஞ்சமி திதி அன்று கருட பஞ்சமி மற்றும் நாகபஞ்சமி வருவது வழக்கம். கருடாழ்வாரை இன்று தரிசிப்பது மிக சிறப்பாகும். மகாவிஷ்ணுவின் கொடி மற்றும் வாகனமாக திகழ்பவர் கருட பகவான். பட்சி ராஜாவாக கருதப்படும் கருடனை வணங்கும் நன்னாளாக அமைந்துள்ளது இன்றைய கருட பஞ்சமி.

 

இன்றைய தினத்தில் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, வீட்டு வாசலில் கோலமிட்டு, அதன் மீது மனைப்பலகையில் கோலமிட்டு அதில் கருட ஆழ்வார் படம் அல்லது சிறிய சிலை இருந்தால் அதை வைத்து வழிபாடு நடத்தலாம். அப்படி கருடாழ்வார் படம் இல்லாதவர்கள் உங்களுக்கு பிடித்த பெருமாளைக் கொண்டும் இந்த வழிபாட்டை நடத்தலாம். வெறும் துளசி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினாலே போதுமானது. அப்படி பூஜிக்கும் போது,

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸொர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்

என்ற கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜமிப்பதால் அதிக பலன்கள் கிட்டும். புளியோதரை நைவேத்தியம் படைத்து, வாசலுக்கு வந்து கருடன் பறப்பதாக நினைத்து வானை நோக்கி கையெடுத்து வணங்குகள், அதன் பின்னர் பூஜைகளை எல்லாம் நிறைவு செய்த பிறகு துளசி தீர்த்தம் அருந்துங்கள்.

இதனை திருமணமான பெண்கள் செய்வதன் மூலம் கணவனின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மாங்கல்ய பலம் கூடும், கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும், பயம் நீங்கி மனம் தெளிவு பெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், நாகதோச நிவர்த்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் இன்றைய நாளில் புதிய வளையல்களை பூஜையில்  வைத்து, அதை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுத்தால் மாங்கல்யம், குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.


Share this:

Related posts

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN

5 நாட்களுக்கும் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!!

NEWSKADAI

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI