Newskadai.com
தேர்டு ஐ

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

Share this:

நேற்றைய தினம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கை நமக்குச் சொல்வதென்ன? ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி. ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி மற்றும் மும்மொழி பாடத்திட்டம் அறிமுகம்.

அதாவது ஐந்தாம் வகுப்பு வரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி ஆறாம் வகுப்பிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் மூன்றாவதாக ஒரு மொழியை படித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடைமுறையில் இருக்கின்ற ஆங்கில மொழியை திறம்பட பயிற்றுவிக்க அரசு எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினாலேயே தனியார் ஆங்கில பள்ளிகளுக்கு பெற்றோர் படையெடுத்து செல்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கில பள்ளிகளில்தான் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவதாக ஏதாவது ஒரு உலக மொழியை மாணவர்கள் கற்க அரசு மாணவர்களுக்கு எத்தனை மொழி வாய்ப்புகளை வழங்கும்?

இந்தியாவின் பல வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கல்வி வழியே இந்தி மொழியை திணித்து அம்மாநிலங்களை இந்தி பேசும் மாநிலங்கள் பட்டியலில் சேர்த்த மத்திய அரசு, தற்போது தென்னிந்தியாவையும் அந்தப் பட்டியலில் சேர்க்க மட்டுமே இச்சட்டம் உதவி புரிவதாக உள்ளது.

ஏற்கனவே பள்ளிக்கல்வியில் மாணவர்கள் இடை நிறுத்தம் (discontinue) அதிகரித்துவருகிறது. மாணவர்கள் பள்ளிப்படிப்பை விட்டு பாதியில் நிற்பதற்கு ஆங்கில, கணக்கு பாடங்களும் துணைபுரிகின்றன. இனி மூன்றாவதாக ஒரு மொழியை கற்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் போது பள்ளிப்படிப்பை பாதியில் விடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் என்பதில் ஐயமில்லை. அனைத்து உயர் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி இருக்கிறது மத்திய அரசு. ஏற்கனவே பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களின் பாதிப்பேர் மட்டுமே கல்லூரிப்படிப்பை தொடர்கிறார்கள் என்பதற்கு ஏகப்பட்ட புள்ளி விவரங்கள் அரசிடமுண்டு. இந்த நுழைவுத் தேர்வுகள் மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை மேலும் குறைத்து விடும்.

மேலும் படிக்க:http://உயர் கல்விக்கு விடுப்பு… புதிய கல்விக்கொள்ளையின் முக்கிய அம்சங்கள் என்ன?

பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு பாடத்தை அது கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் எது சார்ந்ததாக இருப்பினும் அதைப் படிக்க விடாமல் தடை போடும் நுழைவுத்தேர்வுகள் எதற்காக? அதனால் யாருக்கு என்ன பயன்…

பொதுவாக வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் அடங்கிய பகுதி) கலை அறிவியல் பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் அதிகம், நுழைவுத்தேர்வு என்ற போர்வையில் தென்னிந்திய மாணவர்களின் கல்வி வாய்ப்பை தட்டிப் பறித்து வட இந்திய மாணவர்களுக்கு வழங்கும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைதான் இந்த நுழைவுத் தேர்வுகள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இனம், மொழி, தேச வேறுபாடு கிடையாது. அனைத்து மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும். பள்ளிக் கல்வியை முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எந்த தடையும் இல்லாமல் கல்லூரியில் சேர்ந்து அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

மேலும் படிக்க:http://“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் மட்டுமல்லாமல் கடல்சார் கல்வி, வனம் சார் கல்வி, புவிசார் கல்வி, வானியல் சார் கல்வி, மின்னணு சார், கல்வி உணவு சார் கல்வி, மேலாண்மை சார் கல்வி, வேளாண்மை சார் கல்வி மற்றும் ஊடகக் கல்வி, இது போன்ற இன்னும் பல துறை சார் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நாடு முழுவதும் அரசு உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தான் விருப்பப்பட்ட பாடத்தை எந்த தடையும் (நுழைவுத் தேர்வு) இல்லாமல் படிக்கும் நிலை உருவாகும்.

இந்நிலை ஏற்பட்டால்தான் எதிர்கால இந்தியா வளமான இந்தியாவாக இருக்கும். மாறாக நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் கல்வி கனவில் கல்லை தூக்கிப்போட்டு, நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று குருகுல கல்வி, கல்விக்கான குல, வர்ண, சாதி, மத தகுதி என்று வர்ணாசிரம சித்தாந்தங்கள் தலைவிரித்தாடிய பண்டைய இந்தியாவில் கொண்டு போய் விட்டு விடும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களே உஷார்…


Share this:

Related posts

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : சாம வேத சம்கிதை

NEWSKADAI

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

சிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்

NEWSKADAI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI