Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

Share this:

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடனும், இன்று மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவற்றுக்கெல்லாம் தளர்வு:


  • சென்னையில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்ட அனைத்து நிறுவனங்களும் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

  • உணவகங்கள், தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்தலாம்.

  • உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். உணவகங்களில் முன்பு உணவகங்களில் முன்பு இருந்தது போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

  • ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் தரிசனத்திற்கு அனுமதி.

  • பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

  • காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி

  • ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி

  • அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்தயும் ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி


Share this:

Related posts

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

MANIMARAN M

காதலுக்கு எதிர்ப்பு?… தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்துடன் உடன்கட்டை ஏறிய காதலன்…!

THAVAMANI NATARAJAN

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

MANIMARAN M