Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அடிதூள் : நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்..!!

Share this:

கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப்பூமியாக திகழ்வது ஊட்டி. இங்கு வெளி மாவடங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிக முக்கியமாக குன்னூரிலிருந்து மலை ரயில் மூலம் ஊட்டிக்கு செல்வது மிக சிறந்த அனுபவமாகும்.

மேலும் படிக்க : http://உயிரை குடிக்கும் கொரோனா… உங்க ஊரில் எவ்வளவு..?!

பேருந்துகளில் செல்வதை விட இந்த மலை ரயில் மூலம் செல்வதால் இயற்கை காட்சிகளை அதிக அளவில் கண்டுகளிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த மலை ரயில் ஊட்டி-குன்னூர், ஊட்டி-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான ரயில் ஆகும்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருவதால் ஊட்டியில் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளி கல்லூரிகளும் விடுமுறையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனடிபடையில் நாளை (10.10.2020) முதல் குன்னூர்-ஊட்டி இடையே மீண்டும் மலை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : #குட்நியூஸ் : ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள்… அரசு போக்குவரத்துவக்கழகம் ஏற்பாடு..

மலை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இந்த ரயில்களில் டிக்கெட் பெறுவது மிகமிக கடினமாக இருக்கும். வரும் ஏப்ரல், மே மாத சீசனில் சுற்றுலா வர திட்டமிடுவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்துக் கொண்டால் மட்டுமே மலை ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு பெறுவர்.


Share this:

Related posts

திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்…

THAVAMANI NATARAJAN

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

தொடர்ந்து குறையும் தங்கம் விலை… இது வாங்க வேண்டிய நேரம்..!!

NEWSKADAI

இந்த ராசிகாரர்களே… கோபத்தை குறைத்தால் லாபம் பெருகும்… வெற்றி நிச்சயம்..!!

THAVAMANI NATARAJAN

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI