Newskadai.com
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று ஓடத் துவங்கிய பஸ் மற்றும் ரயில்கள் : மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..!!!

Share this:

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மாநிலம் முழுவதுக்குமான பொது போக்குவரத்து இன்று முதல் இயக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் இரண்டு மாதங்களாக சில சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு அரசு அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்ட தலை நகரங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்குமான நீண்டதூர பயணங்களுக்கு பேருந்துகள் இயக்கபடவுள்ளன.

அதேபோல் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் இயக்கபடவுள்ளது. அரசு பேருந்தில் முன்பதிவு விவரம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், “அரசு விரைவு பேருகளில் பயணம் செய்ய இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

இன்று பயணம் செய்ய மட்டும் 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து தலா 24 பயணிகளுடன் பேருந்துகள் புறப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்தில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

 


Share this:

Related posts

காதலுக்கு எதிர்ப்பு?… தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்துடன் உடன்கட்டை ஏறிய காதலன்…!

THAVAMANI NATARAJAN

சினிமா பாணியில் சிலை கடத்தல்… இணைய பேரத்தில் சிக்கிய கொள்ளை கும்பல்…

MANIMARAN M

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

அடித்து நொறுக்க போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

NEWSKADAI

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

தூக்கத்தில் நடந்த துயரம்: குடிசை வீட்டில் பயங்கர தீ விபத்து…!!

MANIMARAN M