Newskadai.com
இந்தியா

ஒரே நாடு… ஒரே லைசன்ஸ்… ஒரே ஆர்.சி.புக்… டிஜிட்டல் இந்தியா…

Share this:

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல் படுத்தியுள்ள மத்திய அரசு அடுத்த நடவடிக்கையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி.புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய திட்டத்தை அக்டோபர் 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மோட்டார் வாகன விதிமுறை சட்டம் 1989-ல் கொண்டு வரப்பட்ட புதிய மாற்றங்களின் அடிப்படையில் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி புக் ஒரே மாதிரி இருக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அப்படி கொண்டுவரப்படும் ஓட்டுநர் உரிமத்தில் கியூ.ஆர்.கோடும் மைக்ரோ சிப்பும் இடம்பெற இருக்கின்றன. இதன் மூலம் 10 ஆண்டுகள் வரையிலான ஓட்டுநர் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் விவரங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புக் ஆகியவற்றை அக்டோபர் முதல் தேதிக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இது மட்டுமல்லாமல் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகையும் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்படவுள்ளது.


Share this:

Related posts

ஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக சுற்றுலா… ஏழை தாயின் ஆசையை நிறைவேற்றிய அன்பு மகன்..!!

THAVAMANI NATARAJAN

அவலத்தின் உச்சம்: 14 நாட்களாக ‘டாய்லெட்டில்’ இறந்து கிடந்த இளைஞர்… கண்டுகொள்ளாத ‘மருத்துவமனை’…!

THAVAMANI NATARAJAN

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

NEWSKADAI

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

N-95 மாஸ்க் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது… அதிர்ச்சி தகவல்…!!

NEWSKADAI