Newskadai.com
தமிழ்நாடு

‘குடி’மகன்களுக்கு குஷியான செய்தி…. சென்னையில் டாஸ்மாக் திறப்பு குறித்து அதிரடி அறிவிப்பு…!!

Share this:

தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க கடந்த மே மாதம் அரசு அனுமதி அளித்தது. அதேவேளையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவில்லை. தற்போது சென்னையில் கொரோனாவின் ஆட்டம் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05.2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

 

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும் மால்கல் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

ஜூன் 14வரை எவற்றுக்கெல்லாம் தடை நீடிக்கும்… தமிழக அரசின் அறிவிப்பு இதோ…!

NEWSKADAI

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN