Newskadai.com
லைஃப் ஸ்டைல்

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

Share this:

இன்றளவிலும் அதிகமான கிராமங்களில் பல மக்கள் வருமானத்திற்காக ஆடு, கோழி வளர்ப்பதையும், கடலோர கிராமங்களில் இறால் வளர்ப்பதையும பார்த்திருப்போம், ஆனால் இந்தியாவில் கேள்விப்படாத ஒன்றாக ஆழ்க்கடலில் மட்டுமே கிடைக்கப் பெற்ற முத்துக்களை இங்கு ஒருவர் வளர்த்து அதில் வருமானமும் பெற்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.

இருபது வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்துக் கொண்டிருந்த கேரளா காசர்கோட்டைச் சேர்ந்த கே.ஜே.மத்தச்சன் அலுவல் காரணாமாக சீனா சென்றுள்ளார். அங்கு வளர்ப்பு முத்து சாகுபடி குறித்த படிப்புகள் பயிற்றுவிப்பதை கண்டு, அதில் ஆர்வமுற்ற அவர் தன்னுடைய சவுதி வேலையை துறந்து முத்து வளர்ப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில தொடங்கினார். நன்கு பயிற்சிப் பெற்ற பின் தன் சொந்த ஊருக்கு வந்த அவர் முத்துக்களை வளர்க்கத் தொடங்கினார்.

ஒன்றரை லட்சம் ரூபாயில் 1999-ஆம் ஆண்டு சிறிய முத்து வளர்ப்பு பண்ணையை துவங்கினார். வருடத்திற்கு ஐம்பது வாளி அளவில் முத்துக்கள் கிடைக்கப் பெற்று, அதனை மெருகூட்டி பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். குறிப்பாக சுவிட்சர்லாந்த், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவருடைய முத்துக்களுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாக தெரிவித்த அவர், அதன் மூலம் வருடத்திற்கு மூன்று லட்சம் வரை வருவாய் கிடைப்பதாக கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், முத்து வளர்ப்பில் இயற்கை வகை, செயற்கை வகை, வளர்ப்பு வகை என்று மூன்று வகைகள் உள்ள. இந்திய மார்கெட்டில் விலை மலிவாக கிடைக்கும் முத்துக்கள் செயற்கையானது. நான் வளர்ப்பு முறையில் சாகுபடி செய்கிறேன். மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகளில் இருந்து வரும் நன்னீர் மூலம் வளர்க்கிறேன். அதனால் நான் வளர்க்கும் முத்துக்கள் இந்திய விலையை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று கூறுகிறார்.

சவுதி அரேபியாவிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தால். சாதாரண மனிதனாவே இருந்திருப்பேன், தனித்துவமான ஒரு முயற்சியை மேற்கொண்டதால் இன்று மன நிறைவுடனும், நல்ல வருமானத்துடனும் வாழ்கின்றேன். என்னுடைய முத்து வளர்ப்பினை காண பலரும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பல்கலைகழக மாணவர்களும், மீன்வளத்துறையினரும் வந்து பார்வையிட்டுள்ளார்கள். இத் தொழிலை கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன் என்று தன்னிறைவோடு கூறுகிறார் காசர்கோட்டைச் சேர்ந்த மத்தச்சன்.


Share this:

Related posts

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN