Newskadai.com
தமிழ்நாடு

பெண்களே இனி கவலை வேண்டாம்… வந்தாச்சு புதிய கட்டுப்பாடுகள்…!

ladies bus
Share this:

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் அரசு அரசு சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என்ற அறிவிப்பும் அடங்கும். இதையடுத்து மறுநாளே சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, மகளிர் இலவச பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். ஒரு பயணி நின்றாலும், அவருக்காக பேருந்தை நிறுத்தி ஏற்ற வேண்டும் எனவும் பேருந்தில் இடமில்லை என்று மகளிர் பயணிகளை இறக்கிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும், மகளிரிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாக பேசக் கூடாது, பெண்களிடம் இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக் கூடாது,

ladies bus

பெண்கள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணிக்க வேண்டும், குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்தி இயக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.


Share this:

Related posts

ஆகஸ்ட் 17 முதல் அனைவருக்கும் இ-பாஸ்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

மீண்டும் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

AFRIN