Newskadai.com
தமிழ்நாடு

சேலத்திலும் மோடி திட்டத்தில் மோசடி : அதிகரிக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகள்…

PM Kissan
Share this:

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இதுவரை ஐந்து தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 40,000 பேர் முறைகேடாக சேர்க்கபட்டு பணம் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 4 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் இந்த திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆத்தூர் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆத்தூர் ஒன்றியத்தில் சுமார் 600 பேர் போலியாக இத்திட்டத்தில் சேர்ந்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் ஆத்தூர் வேளாண்மைத்துறை அலுவலக கணினி உதவியாளர் ராஜா என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகாமான முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

PM Kissan

சேலம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் உள்பட போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய வேளாண்மைத்துறை அலுவலகங்கள் உள்பட 20 வட்டார வேளாண் அலுவலகங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடந்த இந்த மாபெரும் மோசடி தொடர்பாக, 10 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். அந்த கணக்குகளில் அரசு செலுத்திய பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

மக்களே இனி புகார் மனுவை தூக்கிட்டு அலைய வேண்டாம்… உட்கார்ந்த இடத்தில் இருந்தே தீர்வை பெற முதல்வரின் புதிய திட்டம்…!!

AMARA

கள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…!!

POONKUZHALI

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M