பிரபல குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்ஸ் காலமானார். 1978ம் ஆண்டு பிரபல குத்துச்சண்டை வீரரான 1978-ல் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்கடித்து பட்டம் சூடியவர். 1976ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். குத்துச்சண்டை வீரராக 26 வெற்றிகள், 17 தோல்விகள், 3 டிராக்களை சந்தித்தவர்.
2019ம் ஆண்டு முதலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லியோன் ஸ்பிங்ஸ், லாஸ்வேகாஸில் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி இரவு காலமானார். 67 வயதே ஆன ஸ்பிங்ஸ் திடீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.