Newskadai.com
இந்தியா

நிலக்கரிச் சுரங்க ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் குற்றவாளி..!!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

Share this:

வாஜ்பாயி ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே நிலக்கரி சுரங்க ஊழலில் குற்றவாளி என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 1999 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரம்மதிஹா நிலக்கரிச் சுரங்கத்தை சிடிஎல் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷார் தீர்ப்பளித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே தவிர, நிலக்கரி அமைச்சகத்தின் இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகளான பிரதீப் குமார் பானர்ஜி, அப்போதைய கூடுதல் செயலாளர் நித்யநந்த் கௌதம், காஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குனர் மகேந்திர குமார் அகர்வல்லா மற்றும் காஸ்ட்ரான் மைனிங் லிமிடெட் நிறுவனம் குற்றம் புரிந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றது Paytm…

MANIMARAN M

இந்தியாவின் கடன் சுமை இத்தனை லட்சம் கோடியா?… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

பச்சிளம் குழந்தையைப் போல் மூதாட்டியை கையில் ஏந்திச் சென்று காத்த காவலர்… குவியும் பாராட்டுக்கள்…!

THAVAMANI NATARAJAN

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

THAVAMANI NATARAJAN

“விவசாயத்தை காப்பாற்றுங்கள்”…. கண்ணியமான கோரிக்கையை கலவரமாக்கிய போலீசார்… விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல்…!!

MANIMARAN M