Newskadai.com
தமிழ்நாடு

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

Share this:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இன்று அதிகாலை, திருச்சி தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. கேரளா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாக பணியாற்றியவர். சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இவரது மனைவி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். மனைவியின் இழப்பைத் தாங்க முடியாத காரணத்தினால் உடல் நிலை மோசமடைந்து, சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA

தலைக்கேறிய குடிபோதை… இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA