Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

Share this:

தமிழகத்தின் இருபெரும் கட்சியினுடைய தலைவர்கள் மறைவிற்குப் பின் தமிழகம் சந்திக்கவிருக்கும் மிக முக்கிய களம் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் களத்தில் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக வின் முக்கிய நபரான வி.பி.துரைசாமி திமுக விலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் பலவித குழப்பங்களுக்கு பிறகு அவரும் பாஜகவில் இணைந்துள்ளார்.

இதனையடுத்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து நடந்து வந்த பிரபலங்களின் கட்சித் தாவலில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி.லட்சுமணன். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.பி., லட்சுமணன் விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவு எடுத்ததால் சசிகலாவால் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தன்னை வேட்பாளராகக் ஆக்க கோரினார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அழுத்ததின் பேரில் வேட்பாளர் சீட் கிடைக்காமல் போனது. இப்படி அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு கடும் அதிருப்தியுடன் இருந்து வந்தார் லட்சுமணன். இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி லட்சுமணன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய முடிவு செய்தார். இதனையடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தமது ஆதரவாளர்களுடன் வந்த லட்சுமணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


Share this:

Related posts

சந்தி சிரிக்கும் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்… பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியில் ஆபாச ஆசிரியருக்கு இடம்…!

POONKUZHALI

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

MANIMARAN M

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

உயிருக்கே ஆபத்து… அலறும் சீமான்… தமிழக அரசுக்கு கொடுத்த அலர்ட்…!

AMARA

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

மூணாறு நிலச்சரிவு: தமிழக குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

NEWSKADAI