Newskadai.com
இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

Share this:

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்றுடன் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளை இரத்த நாளங்களில் இருந்த அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது. அவரது உடல்நிலையை ராணுவ மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. எனினும் ராணுவ மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.


Share this:

Related posts

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

AFRIN

தலைமைச்செயலகத்தில் தீ… தங்க கடத்தல் ஆவணங்களை மறைக்க முயற்சியா?

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

என்னதான் உங்க பிரச்சனை…??? மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

POONKUZHALI

கருப்பு பூஞ்சையை தொடர்ந்து மிரட்டும் மஞ்சள் பூஞ்சை

MANIMARAN M