Newskadai.com
அரசியல்

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

Pranab Mukherjee
Share this:

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி, கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 84 வயதான பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆகஸ்ட் 10ம் தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவிகளின் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் கோமா நிலைக்குச் சென்ற பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரணாப் முகர்ஜி மரணமடைந்ததாக அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.

Pranab Mukherjee

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவரின் மறைவை அடுத்து நாடு முழுவதும் செப்டம்பர் 6ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரணாப் முகர்ஜி பிறந்த சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் இன்று துக்கம் அனுசரிக்கும் விதமாக அனைத்து மாநில அலுவலங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Pranab Mukherjee

மேலும் படிக்க : http://தமிழ்நாட்டில் ஆட்டம் காட்டும் கொரோனா இன்றைய நிலை..? (31-08-2020)… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

இதையடுத்து இன்று பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ராஜாஜி மார்க்கில் அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக ஒரு மணி நேரம் வைக்கப்படுகிறது. பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடல் ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் கொண்டு செல்லப்படும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Share this:

Related posts

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…

MANIMARAN M

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN

துணை முதல்வர் ஓ.பி.எஸ். திடீரென மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்…!!

THAVAMANI NATARAJAN

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

AMARA