Newskadai.com
இந்தியா

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

Pranab Mukherjee
Share this:

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி, கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 84 வயதான பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆகஸ்ட் 10ம் தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

Pranab Mukherjee

இதனைத்தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவிகளின் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் கோமா நிலைக்குச் சென்ற பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரணாப் முகர்ஜி மரணமடைந்ததாக அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.

Pranab Mukherjee

இதையடுத்து இன்று பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணி வரை அவருடைய உடல் வைக்கப்பட்டது. பிரணாப் இல்லத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Pranab Mukherjee

அதன் பின்னர்,  டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருந்ததால் ராணுவ வாகனத்திற்கு வேன் மூலமாக அவரது உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


Share this:

Related posts

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA