Newskadai.com
இந்தியா

தனி கட்சி முதல் ஜனாதிபதி வரை… பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

Share this:

பொருளாதார நிபுணர், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சர், இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவர் என பல பதவிகளை வகித்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்து வந்த அரசியல் பாதை குறித்து விரிவான பதிவு இதோ…

Pranab Mukherjee

1935 – மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் நிருதி எனும் கிராமத்தில் பிறந்தார்.

1969 -தீவிர இந்திரா காந்தியின் ஆதரவாளரான இவர் முதன்முதலில் இந்திரா காந்தியால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1975 – மீண்டும் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1980 – மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1981 – மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1982 – இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி வகித்தார்.

1986 – இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1987 – ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற பெயரில் புது கட்சியை தொடங்கினார்.

1989 – மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1993 – மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1995 – நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1999 – மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2004 – மேற்கு வங்க மாநிலம் ஜங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2006 – மன்மோகன் சிங் அமைச்சரவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

2009 – மேற்கு வங்க மாநிலம் ஜங்கிப்பூர் தொகுதியில் இருந்து மீண்டும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2009 – மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2012 – இந்திய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2019 – பாரத ரத்னா விருது பெற்றார்.

2020 – இவ்வுலகில் இருந்து பிரியாவிடை பெற்றார்.


Share this:

Related posts

விமானப்படைத்தளம் அருகே பயங்கர தீ விபத்து… பரபரப்பு வீடியோ…

MANIMARAN M

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI