Newskadai.com
அரசியல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் எம்.எல்.ஏ.வை பொறுப்பிலிருத்து தூக்கியடித்த அதிமுக தலைமை…!!

Share this:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை என பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.  விசாரணையில் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை காவலர்கள் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் அப்பெண்னிடம் நடத்திய விசாரணையில்
திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

Nanjil

விசாரணையில், நாஞ்சில் முருகேசன் என்கிற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் சிலர் தனக்கு 2  வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதனை யாரிடமும் கூறாமல் தான் மிகவும் சிரமபட்டு
வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

ADMK

இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தன்னுடைய பொறுப்பின் மதிப்பை கெடுத்துக்கொண்டார், அதற்கான தகுதியை அவர்  இழந்துவிட்டார். அவரை கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதோடு, கட்சிக்கு அவரால் களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளிருந்தும் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Share this:

Related posts

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…!!

AMARA

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA

தமிழக பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் கமலாலயம்…!

AMARA

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M