Newskadai.com
அரசியல்

கை விரித்த பாஜக… மீண்டும் திமுகவிற்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ…!

Share this:

1996, 2001, 2006 நடந்த தேர்தல்களில் திமுக சார்பில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் எஸ்.கே.வேதரத்தினம்.

vedharathinam

1977ம் ஆண்டு தனது இருபதாவது வயதில் திமுகவில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம் 34 வருடங்கள் திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் பங்கெடுத்தவர். வேதாரண்யம் பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வருபவர்.

2011-ல் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுகவிலிருந்து வெளியேறிய அவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் இடம் கிடைக்க பெற்று வெற்றியை இழந்தார். அந்த தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர் என்.வி.காமராஜ் வெற்றிப் பெற்றார். திமுக கூட்டனி சார்பில்போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஆர்.சின்னதுரை மூன்றாம் இடத்திற்கு  தள்ளப்பட்டார்.

2015 பாஜகவில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். நரேந்திர மோடி எஸ்.கே.வேதரத்தினதுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் எஸ்.கே.வேதரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தனது பெயர் இல்லாததால் பாஜக மீது அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது.

சில ஆண்டுகள் பாஜகவில் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எஸ்.கே.வேதரத்தினம் நேற்று மீண்டும் காணொலி காட்சி வாயிலாக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்பொழுது பேசிய அவர், தான் திமுகவிற்கு புதிதல்ல, 34 வருடம் திமுகவில் இருந்து வந்துள்ளேன் என்றும், நாகப்பட்டினம், வேதாரண்யம் மக்களிடத்தில் தனக்கு அதிக பரிச்சயம் இருப்பதாக கூறினார்.


Share this:

Related posts

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

AMARA

உயிரைப் பறிக்கும் கழிவுகளை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பா.ம.க

MANIMARAN M

என்னைப் பற்றி யார் கேட்டாலும் சொல்லாதீங்க… சிறைத்துறைக்கு சசிகலா மனு…!

MANIMARAN M

“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…!!

MANIMARAN M