Newskadai.com
தமிழ்நாடு தேர்டு ஐ

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

Share this:

கோலாகலமான இணைப்பு விழா மூலம் தமிழகத்தைச் சார்ந்த அண்ணாமலை IPS அண்ணாமலை BJP ஆக அவதாரம் எடுத்து இருக்கிறார். தமிழக பிஜேபியும் அதன் அகில இந்திய தலைமையும் இதற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்தால் நிச்சயமாக தென்னிந்திய அரசியலில் இவரை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் அதீத வளர்ச்சியை எட்டி பிடிக்க எல்லா வகையிலும் முயற்சி செய்து வரும் பாஜகவின் லேட்டஸ்ட் இணைப்பு இந்த அண்ணாமலை IPS.

கர்நாடகாவில் சில ஆண்டுகளாக மிடுக்கான காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்பொழுதே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்களை வெளியிட்டது. ஆனால் அதை மறுத்த அண்ணாமலை தான் சுயசார்பு வாழ்க்கை வாழப் போவதாக தத்துவார்த்தமாக பேசி வந்தார்.

தான் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் உணர்வால் உயிரால் நான் ஒரு கன்னடன் என்று அவர் உணர்ச்சித் தழும்ப பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டுக்குட்டியை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த அண்ணாமலைக்கு அரசியல்வாதிக்கு தேவையான அத்தனை தகுதியும் இருப்பது இணைப்பு விழாவில் அவர் பேசிய பேச்சிலேயே தெரிகிறது. மோடி, நிர்மலா சீதாராமன் பாணியில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

எதற்கும் பயப்படாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஈவு இரக்கம் இல்லாமல் தான் நினைத்ததை சாதிக்கும் குணம் (அஞ்சாமை), தன்னை நாடி வருகின்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் குணம்(ஈகை), பொய்யையும் உண்மை போல் பேசும் திறன் (அறிவுடைமை), கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என உழைக்கும் மக்களை ஊக்கப்படுத்தும் குணம் (ஊக்கமுடைமை) இந்நான்கும் நாட்டை ஆளுகின்றவர்களுக்கு இருக்கவேண்டிய குணாதிசயங்கள் என்று வள்ளுவர் கூறிய தகுதிகள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு மட்டுமல்லாமல் அனைத்து பிஜேபி தலைவர்களுக்கும் இருப்பதாக கூறியிருப்பதில் அண்ணாமலையின் அரசியல் சாணக்கியம் தெரிகிறது. அரசியலில் இவர் பிழைக்கத் தெரிந்த பிள்ளைதான். பிழைத்துக் கொள்வார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.


Share this:

Related posts

ஆசிரியர் தகுதி தேர்வில் திடீர் திருப்பம் .. அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்..!!

THAVAMANI NATARAJAN

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M

பற்றி எரியும் மீனவ கிராமம்… கடலூரில் இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA