Newskadai.com
தமிழ்நாடு

சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை… தலைமறைவான முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வை அலேக்காக தூக்கிய போலீஸ்…!

Nanjil
Share this:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை என பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.  விசாரணையில் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி காவலர்கள் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வைத்துள்ளனர். அங்கு காவலர்கள் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

நாஞ்சில் முருகேசன் என்கிற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் சிலர் தனக்கு 2  வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதனை யாரிடமும் கூறாமல் தான் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தனர். இதற்கிடையே நாஞ்சில் முருகேசன் தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் உவரியில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Share this:

Related posts

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

THAVAMANI NATARAJAN

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M