Newskadai.com
லைஃப் ஸ்டைல்

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

weather
Share this:

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Rain

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

MANIMARAN M

வெற்றி வாகை சூடும் நாள்… தேவையில்லாத பிடிவாதங்களை தவிர்த்துவிடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

குழந்தைகளுக்கு ஆபத்து..!! நச்சுத்தன்மை நிறைந்த டயபர்கள்..!! அதிர்ச்சி ரிப்போர்ட்

MANIMARAN M

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN