Newskadai.com
லைஃப் ஸ்டைல்

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

Food Medicine
Share this:

அறுசுவை உணவு

சித்த மருத்துவத்தில் உணவுகள் எல்லாம் அறுசுவையை ஆதாரமாகக் கொண்டுள்ளன. அறுசுவையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு தேவையான சமநிலை சக்திகள் கிடைக்கும்.

Food Medicine

இனிப்புச் சுவை

நன்மைகள்:
எலும்புருக்கி நோய்களுக்குச் சிறந்தது, உடலைப் பருக்கச் செய்யும், தாய்ப்பாலை விருத்தி அடையச் செய்யும், எலும்பு முறிவை ஒட்டவைக்கும், தலைச்சுற்று, மயக்கத்தைப் போக்கும்.

*சர்க்கரை நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தாது

தீமைகள்:
அதிகமாகப் பயன்படுத்துவதால் கொழுப்பு அதிகரிக்கும், உடல் பருத்தல், பசிக் குறைவு போன்ற நோய்களை உருவாக்கும், சோம்பல், மெத்தனம் போன்றவை மன அளவில் அதிகரிக்கும்

எடுத்துகாட்டு உணவு:
பால், கரும்பு, தேன்


Food Medicine

புளிப்புச் சுவை

நன்மைகள்:
பசியைத் தூண்டும், இருதயத்திற்குச் சிறந்தது, மலத்தை உடைத்து வெளியேற்றும். எளிதில் செரிமாகும் குணம் உடையது, வாயுவை வெளியேற்றும்

தீமைகள்:
உடல் தளர்ச்சி, பார்வை மங்கல், தலை சுற்றல், சொறி, வீக்கம், கொப்பளம் போன்றவை ஏற்படும். மன அளவில் எரிச்சலையும், கடுப்புத் தன்மையையும், சிடுசிடுப்பையும் உண்டுபண்ணும்

எடுத்துகாட்டு உணவு:
நெல்லிக்காய், புளி, மோர், எலுமிச்சை, இலந்தை


Food Medicine

உவர்ப்புச் சுவை

நன்மைகள்:
அடைப்புகள், மலக்கட்டு போன்றவற்றை நீக்கும், பசியைத் தூண்டும், வேர்வையை உண்டாக்கும்.

தீமைகள்:
தலை வழுக்கை, நரை, நாவறட்சி, தோல் நோய் போன்றவற்றை உண்டாக்கும். அதிகமாக உப்பு எடுப்பவர்கள் உணர்ச்சிவசமாகவும், கோவப்படுபவர்களாகவும், ரத்தக்கொதிப்பு உடையவர்களாகவும் காணப்படுவார்கள்.

எடுத்துகாட்டு உணவு:
சமையல் உப்பு, இந்து உப்பு


Food Medicine

கசப்புச் சுவை

நன்மைகள்:
கிருமி, உடல் எரிச்சல், இரத்தப் போக்கு, மூர்ச்சை, தோல் நோய்கள் போன்றவற்றைப் போக்கும். கொழுப்பை வற்ற வைக்கும், மலம், சிறுநீரைச் சுண்டச் செய்யும், எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, வறட்சியானது, தொண்டையைச் சுத்தம் செய்யும்

தீமைகள்:
தாதுக்கள் குறைவதுடன் வாத சம்பந்தமான நோய்கள் உண்டாகும், மனதில் வறட்சியும் சிந்திக்கும் ஆற்றல் குறைபாடும்.

எடுத்துகாட்டு உணவு:
புடலங்காய், சந்தனம், வேம்பு. நிலவேம்பு, பாகற்காய்


Food Medicine

காரச் சுவை

நன்மைகள்:
தொண்டை நோய், தோல் தடிப்பு, குட்டம் வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். கொழுப்பை உலரச் செய்யும் அக்னியைத் தூண்டும், ஆமம் என்ற விஷத்தைப் பக்குவம் செய்யும், கப நோய்களைப் போக்கும்.

தீமைகள்:
பலக் குறைவு. தோல் சுருக்கம், நடுக்கம், இடுப்பு, முதுகு முதலிய இடங்களில் வலி போன்றவை உண்டாகும், மன அளவில் எரிச்சல், கோபம், உணர்ச்சி, உணர்ச்சி கட்டுப்பாடின்மை, பரபரப்பு, வேகம் முதலியவற்றை ஏற்படுத்தும்.

எடுத்துகாட்டு உணவு:
பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி.


Food Medicine

துவர்ப்புச் சுவை

நன்மைகள்:
வாதத்தை அதிகரிக்கும், பித்த கபங்கள் குறைக்கும். எளிதில் ஜீரணமாகாது. இரத்தத்தைச் சுத்தம் செய்யும் காயங்களை ஆறச் செய்யும், சீத வீரியம் உடையது. கொழுப்பை வற்றச் செய்யும், மலத்தைக் கட்டும்.

தீமைகள்:
மலச்சிக்கல், சுகக் குறைவு, உடல் இளைப்பு போன்றவற்றை உண்டாக்கும், மன அளவில் பொறாமை போன்றவற்றை ஏற்படுத்தும்.

எடுத்துகாட்டு உணவு:
கடுக்காய், தானிக்காய், கடம்பு,


Share this:

Related posts

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

பேச்சு பேச்சா இருக்கனும்… ஏடாகூடமா எதுவும் முயற்சிக்க வேண்டாம் இந்த ராசிகாரரே..!!

THAVAMANI NATARAJAN

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN