Newskadai.com
தமிழ்நாடு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு… இன்னும் சற்று நேரத்தில் 100 அடியை தொடப்போகும் மேட்டூர் அணை..!!

Mettur Dam
Share this:

தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளது, இதைதொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்த திறக்கப்படும் தண்ணீரின் அளவானது அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக ஆணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரானது நேற்று முன்தினம் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது,  நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது, இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.6 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது, இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

கடலில் குளிக்க தடை : வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்…

MANIMARAN M

டிவி சுவிட்ச்சை ஆன் செய்த போது விபரீதம்.. 11 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…

THAVAMANI NATARAJAN

வேகமெடுக்கும் கொரோனா… நாகை, கடலூரில் முதல்வர் இன்று ஆய்வு…!!

MANIMARAN M

சேலத்திலும் மோடி திட்டத்தில் மோசடி : அதிகரிக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M