Newskadai.com
இந்தியா

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

Share this:

நேற்று மாலை 5 மணி அளவில் மகாராஷ்டிரா, ராய்கட் மாவட்டத்தில் உள்ள மகாட் என்ற பகுதியில் இருந்த 5 மாடி கட்டிடம் திடீரென பலத்த சப்தத்துடன் சரிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் 47 குடியிருப்புகள் உள்ளன. அதில் 200க்கும் அதிகமான மக்கள் குடியிருந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களை பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட நிர்வாகம் துரித கதியில் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டது. காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் இது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

 

குழந்தைகள், பெரியவர்கள் என 200 பேர் வரை இங்கு வசித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்ட வேண்டும் என பொதுமக்கள் கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். மீட்கப் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக இவ்விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 


Share this:

Related posts

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M