Newskadai.com
தமிழ்நாடு

ரத்து செய்யப்பட்டது ஏலம் : செத்து மிதந்தது மீன்கள் – நாகூரில் பரபரப்பு…

Share this:

நாகப்பட்டினம் அருகில் இருக்கும் நாகூரில் உள்ள நாகநாதர் ஸ்வாமி கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகநாதர் கோவில் குளத்தில் மீன்பிடித்துக் கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும்.

கடந்த ஐந்தாறு மாதங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாகநாதர் கோவில் நிர்வாகத்தினர் இந்த ஆண்டு கோவில் குளத்தை ஏலம் விடாமல் இருந்து வந்தார்கள். ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் குளம் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏலத்தில் குளம் மிகவும் குறைவான தொகைக்கே கேட்கப்பட்டதால், ஏலத்தை நிறுத்தி வைத்தனர் கோவில் நிர்வாகத்தினர்.

இந்த நிலையில் நேற்று குளத்துக்கு குளிக்க சென்ற சிலர் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையறிந்த கோவில் நிர்வாகத்தினர் நாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் குளத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏலம் கிடைக்காத காரணத்தினால் மீன்களை கொல்வதற்கு குளத்தினுள் விஷம் கலந்து விடப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.


Share this:

Related posts

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

MANIMARAN M

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

THAVAMANI NATARAJAN

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

தமிழக அரசுக்கு அடுத்த பேரிடி… கொரோனாவால் பல கோடிகளை இழந்த முக்கிய துறை…!!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

ரூ.50,000 சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணபிக்கவும்… வருவாய் துறையில் வேலைவாய்ப்பு..!!!

THAVAMANI NATARAJAN