Newskadai.com
சினிமா

மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்…!!

Share this:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் மீரா மிதுன். அடுத்தடுத்து குவிந்த புகார்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுனுக்கு பட வாய்ப்புகள் அனைத்துமே கைவிட்டு போனது. அதனால் கோலிவுட் தனது திறமையை மதிக்கவில்லை எனக்கூறி சென்னையைக் காலி செய்த மீரா மிதுன், மும்பையில் செட்டிலானார். அங்க போயும் சும்மா இல்லாமல் கோலிவுட்டின் டாப் பிரபலங்களை வாய்க்கு வந்த படி தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். நயன்தாரா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நடிகைகளிடம் தொடங்கிய இந்த பட்டியல், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா என வந்து டாப் ஹீரோக்களை டார்கெட் செய்து நீண்டு கொண்டே செல்கிறது.

சோசியல் மீடியாவை ஒருவரை பற்றி அவதூறு பரப்பும் கருவியாக பயன்படுத்தலாம் என்ற நிலை நீடித்துள்ளது வருகிறது. அதை தவறாக கையில் எடுத்துள்ள மீரா மிதுன், நடிகர்கள் விஜய் அவருடைய மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், சூர்யா அவருடைய மனைவி ஜோதிகா ஆகியோர் குறித்து தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால் கடுப்பான விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Meera Mithun

இதையெல்லாம் பார்த்து கோபமடைந்த இயக்குநர் பாரதிராஜா நேற்று மீரா மிதுனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. நடிகர்கள் விஜய், சூர்யா அவர்களின் குடும்பங்கள் மிகவும் கண்ணியமானவை. மேலும் மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் விஜய். பல குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார்.சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் பற்றியோ அவதூறாக விவாதம் செய்வது கண்டனத்துக்குரிய செயல். தான் புகழ் அடைவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, இதற்கு அனைவரும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த விஷயத்தில் மெளனம் காத்து வந்த நடிகர் சூர்யா இன்று தனது ட்விட்ட ர் பக்கத்தில் மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..” என பதிவிட்டுள்ளார். மற்றொரு பழைய பதிவையும் இணைத்துள்ள சூர்யா, “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

பாகுபலி வில்லன் நடிகர் ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் எளிமையாக நடந்து முடிந்த வீடியோ..

NEWSKADAI

விவாகரத்து விவகாரம்… நீதிமன்றம் செல்ல முடிவெடுத்த சமந்தா!

NEWSKADAI

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

NEWSKADAI

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI