இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, செர்பிய நாட்டு நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரிடம் காதல் வயப்பட்டார். கடந்த ஆண்டு நடுக்கடலில் வைத்து நடாஷாவுக்கு புரோபோஸ் செய்த ஹர்திக் பாண்டியா, அசத்தலான போட்டோஸையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார்.
இதையடுத்து 2020 ஆண்டின் புத்தாண்டு பிறப்பின் போது ஹர்திக் பாண்டியாவிற்கும், நடாஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து லாக்டவுன் நேரத்திலேயே இருவரும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இன்றைய தினமே நடாஷா கர்ப்பமாக இருப்பதையும், தான் விரைவில் அப்பாவாக உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஹர்திக் பாண்டியா.
நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் ஹர்திக் பாண்டியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் நடாஷா- ஹர்திக் பாண்டியா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தான் அப்பாவானதை ஹர்திக் பாண்டியாவே சோசியல் மீடியா பக்கங்கள் மூலமாக அறிவித்தார்.
அன்று தனது மகனின் பிஞ்சு கைகளை பற்றி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்திருந்தார். நல்ல செய்தி சொன்ன ஹர்திக் பாண்டியாவிற்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்பாவான குஷியில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தனது மகனை கையில் தூக்கி வைத்திருக்கும் படியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். முதன் முறையாக ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள குழந்தையின் போட்டோ லைக்குகளை அள்ளி வருகிறது.