Newskadai.com
இந்தியா

ஓ.என்.ஜி.சி ஆலையில் தீ விபத்து… பயங்கர வெடி சத்தத்துடன் கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு…!!

Share this:

நாடுமுழுவதும் இந்த வருடத்தில் ஏதாவது ஒருவகையில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஹசிரா எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது.

ONGC-plant

முதற்கட்ட தகவலின் படி அதிகாலை 3:30 மணியளவில் சூரத்தில் உள்ள ஹசிராவை தளமாகக் கொண்ட ஓ.என்.ஜி.சி ஆலையின் இரண்டு முனையங்களில் தொடர்நது மூன்று முறை குண்டு வெடிப்புபோல் வெடித்து சிதறியுள்ளது.

 

இந்த வெடிப்பை தொடர்ந்து பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹசிரா எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டுள்ளனர். தீயை காலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் எதுவென்றால் இப்பெரும் தீ விபத்தால் எந்தவிதமான சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.

இதுகுறித்து சூரத் மாவட்ட ஆட்சியர் தவால் படேல் கூறுகையில்:

எரிவாயு முனையத்திலுள்ள எரிவாயு கொண்டுசெல்லும் குழாய் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக இப்பகுதி முழுவதிலும் சுற்றி வளைக்கப்பட்டு குளிரூட்டப்பட்டது. இதன் அருகிலுள்ள மற்ற ஆலைகள் வழக்கம் போல் இயங்குகிறது. ஓ.என்.ஜி.சி ஆலையும் விரைவில் ஓரளவு செயல்படும் என எனக்கு தொரிவித்துள்ளனர். என்று கூறினார்.


Share this:

Related posts

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

NEWSKADAI

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான அடல் சுரங்க பாதையில்… இத்தனை சிறப்பம்சங்களா?

AMARA

கல்லூரி மாணவர்களை கவலையில் ஆழ்த்திய மத்திய அரசு… இதுக்காகவா இத்தனை நாள் வீட்டிலிருந்தோம்…!!

MANIMARAN M

பிறந்து 16 மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தை மரணம்… பெற்ற தாயே எமனாக மாறிய பயங்கரம்..!!

THAVAMANI NATARAJAN

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI