ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இன்று அதிகாலை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கொரோனா நோயாளிகள் பலி. விஜயவாடாவில் தனியார் மருத்துவமனை ஒன்று அங்குள்ள ஸ்வர்ன பேலஸ் ஹோட்டலில் கொரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளது. இன்று அதிகாலை அந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 7 பேர் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஸ்வர்ண பேலஸ் ஹோட்டலில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குளிர் சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவினால் இந்த தீ விபத்து நிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.