Newskadai.com
இந்தியா

கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்…!!

Share this:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஷ்ரே மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு 8 தீயணைப்பு வாகனமும், 10 ஆம்புலன்ஸுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மற்ற நோயாளிகள் உடனடியாக சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

மாநில முதல்வர் விஜய் ரூபானி இவ்விபத்து குறித்து விசாரணை செய்ய கூடுதல் சிறப்பு செயலாளர் சங்கீதா சிங்கிற்கு உத்தவிட்டுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்..!!!

MANIMARAN M

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M