Newskadai.com
தமிழ்நாடு

தொடரும் சதுரங்க வேட்டை : நான்கு மடங்கு தருவதாக ஆசையை தூண்டிவிட்டு நூதன மோசடி…!!

Share this:

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாத்துக்குடி பகுதியில் முதலீடு செய்யும் பணத்துக்கு நான்கு மடங்கு திருப்பி தருவதாகக் கூறி ரூபாய் 20 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தனியார் நிறுவனம். திருச்சியைச் சேர்ந்த எல்பின் நிறுவனம் பலவித கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தின் மயிலாடுதுறை பகுதி ஏஜெண்ட் முத்துகுமார் நல்லாத்துகுடி பகுதியில் இந்த நிறுவனத்திற்கு ஆட்களை சேர்த்துள்ளார்.

Amount

திட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலும் 5 நபரை சேர்த்தால் அதற்கு அதிக கமிஷன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பி நல்லாத்துக்குடியை சேர்ந்த இந்திரா என்பவர் இதில் சேர்ந்துள்ளார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, இந்திராணி, கோகிலா, பிரியங்கா, ஐஸ்வர்யா உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களையும் சேர்த்து விட்டுள்ளார். இவர்கள் அனைவரும் எல்பின் நிறுவன ஊழியர் திருப்பூரை சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் வங்கி மூலமாகவும், நேரிலும் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

பணம் செலுத்தி சில மாதங்கள் ஆனபிறகு அவர்கள் கூறியபடி பரிசுப் பொருளோ கமிஷன் தொகையோ கிடைக்காத காரணத்தினால் அன்பழகனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அன்பழகனோ ஊரடங்கினால் கால தாமதாம் ஆவதாக கூறியதில் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் திருப்பூர் அன்பழகன் நேற்று முன்தினம் நல்லாத்துகுடிக்கு பணம் பெறுவதற்காக ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையறிந்த இந்திரா மற்றும் பணம் முதலீடு செய்தவர்கள் அன்பழகனை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் ஏஜெண்ட் முத்துக்குமார், நிறுவன உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ், அன்பழகன், ராமு, ஞானப்பிரகாசம் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நிறுவன ஊழியர்கள் திருப்பூரை சேர்ந்த அன்பழகன், ஞானப்பிரகாசம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Share this:

Related posts

ஒரு சில மாவட்டம் தவிர குறைந்த கொரோனா… உங்கள் மாவட்டத்தில்?!

NEWSKADAI

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு… போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

THAVAMANI NATARAJAN

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இவ்வளவா?! கண்கலங்க வைக்கும் வெங்காயம்..!

THAVAMANI NATARAJAN

தென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…!!

MANIMARAN M