Newskadai.com
தமிழ்நாடு

சதுரங்க வேட்டை பாணியில் சீட்டு கம்பெனியின் சீட்டிங்… ஆயிரக்கணக்கானோர் கதறல்…!!

Share this:

தேனி நகரில் ராஜேஷ் என்பவர் ஜெயம் என்ற பெயரில் நடத்தி வந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், அதில் முதலீடு செய்த பொது மக்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சுற்றியுள்ள கிராம மக்களில் அதிகமானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 2000 பேருக்கும் அதிகமானோரிடம் சீட்டு நடத்தி சுமார் 50 கோடி ரூபாய் பணத்துடன் ஜெயம் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஷ் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உதய நிலா என்ற நிதி நிறுவனத்தை அஜீஸ்கான் மற்றும் ஜமால் ஆகியோர் இணைந்து நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம் சேமிப்பு திட்டம், மாதாந்திர சீட்டு என்று மக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று வந்துள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வந்ததால் சுற்றியுள்ள கிராம மக்களில் அதிகமானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் உரிமையாளர் அஜீஸ்கான் உயிரிழந்ததால் உதயநிலா நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் தங்களது பணத்தை திருப்பி தரும்படி அந்த நிறுவனத்தின் பங்குதாரரான ஜமாலிடம் கேட்டுள்ளனர். ஆனால் ஜமால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த இரு நிறுவனங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை மீட்டு தருமாறு தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


Share this:

Related posts

தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் நொய்யல் ஆறு – அதிரவைத்த ஆய்வு..!!

MANIMARAN M

“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

NEWSKADAI

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

மூணாறு நிலச்சரிவு: தமிழக குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

NEWSKADAI

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

THAVAMANI NATARAJAN

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M