Newskadai.com
தமிழ்நாடு

சிங்கப் பெண் சாவித்திரி: ஆதரவற்றோர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண் காவலர்…!

Share this:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு பகுதியில் 80 வயது பெண்ணொருவரும், 55 வயது ஆண் ஒருவரும் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளனர். ஆதவரற்றோர்களான இருவரின் உடல்களையும் வாய்மேடு காவல்துறையினர் கைப்பற்றி நாகை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த ஆதரவற்ற இருவரின் உடல்களையும் மருத்துவமனை நிர்வாகமே அடக்கம் செய்ய முடிவு செய்தது. இதற்கிடையில் வாய்மேடு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவரும் சாவித்ரி அந்த இரு உடல்களையும் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர் அவ்விரு உடல்களையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகையில் உள்ள ஒரு மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். மயானத்தில் இருவரின் உடல்களுக்கும் மஞ்சள் தெளித்து, வாய்க்கரிசி போட்டு உறவினர் போன்று இறுதி சடங்குகளையும் செய்தார்.

பின்னர் அவ்விரு உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. சக மனிதனை மனிதனாகக் கூட பார்க்காமல் ஜாதி மதக் காரணங்களுக்காக கொலை செய்யக்கூட தயங்காத இந்த காலத்தில், என்ன மதம், எந்த ஜாதியென்று தெரியாத ஆதரவற்றோருக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ் ஏட்டு சாவித்ரியின் மனிதநேய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M

கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா… தமிழக அமைச்சர் அதிரடி..!!!

MANIMARAN M