Newskadai.com
அரசியல்

5 நதிகளை தூய்மைப்படுத்த அதிரடி திட்டம்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!!

Share this:

மத்திய அரசால் பலவகையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் கங்கை நதி தூய்மை திட்டம் போல நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளையும் தூய்மை படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை அன்று இணையவழி கருத்தரங்க ஒன்றில் பேசிய மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் பிரிவான கங்கை நதி தூய்மை திட்டத்தின் தலைமை இயக்குநர் ராஜுவ் ரஞ்சன் மிஸ்ரா கூறுகையில் “பெரியாறு, காவிரி, கோதாவரி, மகாநதி, நர்மதை” ஆகிய 5 நதிகளின் நீர் வளம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் அதிக நிலபரப்பை கொண்டுள்ளவை இந்த 5 நதிகளே ஆகும். இந்த நதிகளைச் சார்ந்த பல்லுயிர்பெருக்கம், கரையோர நகரங்கள், தற்போதைய மாசு அளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் மத்திய ஜல்சக்தி அமைச்சக செயலர் யு.பி.சிங் அவர்கள் தெரிவிக்கையில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இருந்து பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ளப்பட்டது.

அவைகளை நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கங்கை நதி தூய்மை திட்டம் போலவே நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளையும் தூய்மைப்படுத்தும் பணியை செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது என தெரிவித்தார்.


Share this:

Related posts

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

“ஏம்மா ஒரு ஃபுளோவா போய்க்கிட்டு இருக்கேன் இல்ல”… சினிமா ஷூட்டிங்கைப் போல் ரீ-டேக் எடுத்த குஷ்பு… வைரல் வீடியோ…!

AMARA

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

மக்களின் மீதான பொருளாதார வேட்டை : ரத்தத்தை உறிஞ்சும் அரசுகள் – ஸ்டாலின் கடும் தாக்கு….!!

MANIMARAN M

மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சமூக விரோதிகள்…!

AMARA