Newskadai.com
தமிழ்நாடு

மதுரையில் மகனுக்கு மெழுகு சிலை… பாசத்தால் உயிர் கொடுத்த தந்தை…!

madurai
Share this:

தமிழகத்தில் பொதுவாக மூத்த தலைவர்களுக்கு மெழுகுசிலை வார்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக இறந்த தனது அன்பு மகனுக்கு மெழுகு சிலை அமைத்துள்ள தந்தையின் செயல் அணைவரையும் நெகிழவைக்கிறது. மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்நத் முருகேசன் சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகளுக்கு பிறகு மாரிகணேஷ் பிறந்ததால் அவர் மீது அவரது குடும்பத்தார் அளவிலா பாசத்தை காட்டி வளர்த்துள்ளனர். அவரும் தன்து குடும்பத்தின் மீது அதீத பாசத்துடன் இருந்து வந்துள்ளார். கடைக் குட்டியாக பிறந்த மாரிகணேஷ்க்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

wax statue for the sonமேலும் படிக்க : http://“சூரரைப்போற்று” படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா?… ஷாக்கிங் உண்மை இதோ…!

இளமையில் புல்லட் பைக் ரேசராக இருந்து மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இருப்பினும் 2019 நவம்பர் மாதம் 18 ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் தனது மகனின் நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் 6 லட்சம் செலவில் மாரிகணேஷிற்கு 6 அடியில் தத்ரூபமாக மெழுகு சிலை வார்த்துள்ளார். மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 6 அடியில் 6 லட்சம் செலவில் மகனுக்கு மெழுகுசிலை வார்த்த தந்தையின் அன்பை கண்டு அவரது உறவினர்கள் நெகிழ்சியடைந்துள்ளனர்.


Share this:

Related posts

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தொடக்கம்… பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : புயலாக மாறலாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

MANIMARAN M

பட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு … முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

MANIMARAN M

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN