Newskadai.com
தமிழ்நாடு

வேலூரில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, மகள் வெட்டிக்கொலை…!!

Crime
Share this:

தமிழகத்தில் கொலை சம்பவங்கள்  நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே தந்தை மகளை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜார்தா  கொல்லை மலை கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் மனைவி பாஞ்சாலை, மற்றும்  10 வயதே ஆன தனது மகள் தீபாவுடன் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் அன்சர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பொன்னுசாமியின் மனைவி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது.

Crimeஇதனால் அவர் தனி அறையிலும், பொன்னுசாமியும் அவரது மகள் தீபாவும் வெளி அறையில் தூங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று காலை தோட்டத்துக்கு வந்தவர்கள், பொன்னுசாமி அவரது மகள் தீபா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்துள்ளனர். கழுத்து மற்றும் உடல் பகுதியில் தாறுமாறாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.

Crime

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார், கூடுதல் கண்காணிப்பாளர் ஜான் ஆகியோர் வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

மதுரை டூ நாகர்கோவில்… மூன்றரை மணி நேரத்தில் உயிர் காக்க பறந்த ஆம்புலன்ஸ்… பரபரப்பு நிமிடங்கள்…!

THAVAMANI NATARAJAN

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M