Newskadai.com
தமிழ்நாடு

மார்பில் அடித்துக்கொண்டு கதறும் விவசாயிகள்… சேதமான நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம்..!

Share this:

மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் திடீரென நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதால் விவிசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 60 நாட்களுக்கும் மேலாக 10 ஆயிரம் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்து கொள்முதல் நிலையத்தில் பாதுகாத்து வருகிறோம்.

சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து முளை விட்டுள்ளது. இதனால் உடனடியாக அரசு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாயிலாடுதுறை திருவாரூர் சாலையில் வழுவூர் கடை வீதியில் மழையில் நனைந்த சேதமான நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த பெரம்பூர் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கொள்முதல் செய்ய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Share this:

Related posts

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

கந்து வட்டி கொடுமை: சேலத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

வைகை எக்ஸ்பிரஸில் தீ விபத்து : திருச்சியில் பயணிகள் அவதி…!!!

MANIMARAN M

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை…!!

MANIMARAN M

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த புதிய கல்வி கொள்கை… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN