Newskadai.com
தமிழ்நாடு

கொதித்தெழுந்த மன்னார்குடி விவசாயிகள்… வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்…!!

Share this:

நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மூன்று புதிய வேளாண் சட்ட மசோதாக்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதனை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவையைச் சார்ந்த விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாய நிலங்களை விட்டும், வேளாண் தொழிலை விட்டும் விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் விதமாக இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் சட்ட நகல்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Share this:

Related posts

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

வேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…!

MANIMARAN M

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

யூ-டியூப் பார்த்து இளைஞர்கள் செய்த காரியம்… கடை கடையாய் ஏறிய போது கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்க போகும் கனமழை… வானிலை எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI