Newskadai.com
இந்தியா

உழவுக்கு உயிர் கொடுக்கும் டிராக்டர்களையே எரித்து எதிர்ப்பு … இந்தியா கேட்டில் பதற்றம்… வீடியோ…!!

Share this:

மத்திய அரசு பல்வேறான திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள் விவசாய மக்கள்.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததின் பேரில் புதிய வேளான் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் விவசாயிகள் மிகப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போராட்டங்கள் கடுமையாக நடைபெறுகிறது.

மேலும் தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து மாநிலம் முழுவதுமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர். இந்த நிலையில்  டெல்லி இந்தியா கேட் அருகே நடந்த போராட்டத்தில் திடீரென டிராக்டர் ஒன்றை சாலையில் உருட்டி விட்டு அதில் தீ வைத்து எரித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் இந்தியா கேட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

மத்திய பிரதேசத்தில் தலை, பெங்களூருவில் உடல்… கொலையா? தற்கொலையா? குழம்பும் போலீசார்..!!

THAVAMANI NATARAJAN

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை கிழித்தெறிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

MANIMARAN M

பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழைந்த ‘கொரோனா’… 400 ஊழியருக்கு தொற்று உறுதியானதால் பீதி…!

NEWSKADAI