Newskadai.com
தமிழ்நாடு

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

Share this:

மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க கோரி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டுவந்தது. சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டு மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை நஷ்டத்தில் இயங்க வைத்து மூடுவதற்கு காரணமானவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் காமராஜ், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ராமலிங்கம், கணேசன், இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.


Share this:

Related posts

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN

சென்னையில் கட்டுக்குள் வரும் கொரோனா… அமைச்சர்கள் குழு திடீர் ஆலோசனை…!!

AMARA

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

AMARA

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

மேட்டூரில் பாம்பை வெட்டி விருந்து சமைத்த  இளைஞர்கள்… வலைவீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN