Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

Share this:

தனி ஒரு ஆளாக 3 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாயை வெட்டி தனது கிராமவாசிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார் பீகாரை சேர்ந்த விவசாயி. பீகார் மாநிலம் கையா மாவட்டத்தில் உள்ள கொதிலவா மலை கிராமத்தில் வசித்து வருபவர் லவுங்கி புயான் என்ற விவசாயி. இவர் கால்நடைகளையும் வளர்க்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

தனது கால்நடைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மேய்ச்சலுக்கு விடுவார். மழைக் காலங்களில் அருகில் உள்ள மலையிலிருந்து வரும் நீர் வீணாக ஆற்றில் கலந்து பயனற்று போகும் மழை நீரை தனது கிராம மக்களின் நீர் தேவைக்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்த லவுங்கி புயான் கால்வாய் வெட்ட ஆரம்பித்தார். தினமும் கால்நடைகளை மேய்க்க செல்பவர் அப்படியே கால்வாய் வெட்டும் பணியையும் தனி ஒரு ஆளாகவே செய்து 3 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாயை வெட்டி முடித்துள்ளார்.

இந்த பணியை கடந்த 30 வருடங்களாக செய்து தற்போது கிராமத்து குளத்தில் அந்த கால்வாயை இணைத்து நீர் நிரம்ப செய்துள்ளார். லவுங்கி புயானின் இந்த செயலால் கிராமவாசிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனது சொந்த நலனுக்காக அல்லாமல் கிராமத்தினர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் பெரும் சேவையை செய்துள்ளார் என்று அவ்வூர்வாசிகள், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… கைல பணத்த வச்சுகிட்டு எதுக்கு சும்மா இருக்கனும்…!!

NEWSKADAI

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN