Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

fake
Share this:

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஆன்லைன் முறைகேடு தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட்டுக்குகளில் மோசடி நடந்துள்ளது. ரயில் டிக்கெட்டுகள் விற்பனை மற்றும் முன்பதிவு செய்ய சில தனியார் ஆன்லைன் மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுபுறப்பகுதிகளில் உள்ள சில கம்ப்யூட்டர் மையங்களில், எந்தவிதமான அனுமதியுமின்றி ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல் போலி ஆவணங்கள் பயன்படுத்தி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் மணல் விற்பனை செய்யவதிலும் முறைகேடு நடைபெற்றுகிறது.

fakeதற்போது கொரோனா பரவலால் ஊரடங்கு நீட்டித்து பிறகு தளர்வுகள் விடப்பட்ட நாளில் இருந்து ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவது அதிகமாகிவிட்டது. இந்த சூழ்நிலையை சாதகமாக்கிகொண்டு சிலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி பேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்து குறைந்த விலையில் செல்போன் கிடைக்கும் என்ற ஆசையில் 2999 ரூபாய்க்கு செல்போன் ஒன்றை கடந்த 2 ம் தேதி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த செல்போனுக்காக காத்திருந்த முகமது அலிக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்.

மேலும் படிக்க : http://‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

அப்படி என்ன நடந்திருக்கும் என்று பார்த்தால் வந்த பார்சலில் போனுக்கு பதிலாக அதில் சீட்டு கட்டுகள் இருந்துள்ளது. உடனே டெலிவரி கொண்டு வந்த நபரை பிடித்து பள்ளிகரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். டெலிவரி செய்தவருக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதால் அவரை விட்டுவிட்டனர். மேலும் புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றியுள்ளனர். முகமது அலி நல்ல வேலை பணத்தை செலுத்தாமல் முதலில் பார்சலை பிரித்து பார்த்ததால் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருக்க முடிந்தது.


Share this:

Related posts

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

நாகை மக்களுக்கு ரூ.1000 கோடியை அள்ளிக்கொடுத்த முதல்வர்… அசத்தலான திட்டங்கள்…

MANIMARAN M

ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M

மன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…!!

MANIMARAN M

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M