Newskadai.com
தமிழ்நாடு

ஈரோட்டில் பரபரப்பு: கடைக்காரருக்கு ஏற்பட்ட ‘திடீர்’ சந்தேகம்… அலறியடித்து வந்த போலீசார்…!

beating counterfeit note
Share this:

ஈரோடு அருகே கள்ள நோட்டு அடித்ததால் வாலிபர் இருவரை கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் வீடியோ பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து இருவர் போலீசில் சிக்கினர் இதுபோன்ற பல்வேறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு நசியனூர் நோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சில்லி சிக்கன் கடை உள்ளது. அங்கு  நேற்று முன்தினம் இரவு சில்லி கடைக்கு வந்த 2 வாலிபர்கள் அங்கு பணியாற்றிய பால்ராஜ் என்பவரிடம் அருகில் உள்ள டாஸ்மாக்கடையில் மது வாங்கிவருமாறு ரூ.500 ஐ கொடுத்துள்ளளனர்.

beating counterfeit noteமேலும் படிக்க: http://“இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

இந்த நிலையில் பால்ராஜ், அவர்கள் கொடுத்த ரூ.500 கள்ள நோட்டு போல் இருப்பதால் சந்தேகமடைந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாரத், உள்ளிட்ட காவலர்கள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சவுந்தர் வயது 20,  சதீஸ் வயது 23 என்பது தெரியவந்தது.

Money cheating

மேலும் இவர்களிடம் நடத்திய  விசாரணையில், இருவரும் காரில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளனர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாம் திண்டாடி வந்துள்ளனர். இந்நிலையில் யூடியூப் மூலம் கள்ள நோட்டு அடிப்பது எப்படி என பார்த்து ஜெராக்ஸ் எந்திரத்தின் மூலம் கள்ள நோட்டுகளை அடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.20,100, கார், மோட்டார் சைக்கிள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Share this:

Related posts

ஊசி போட்ட செவிலியர்… மகன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த தாய்… அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…!!

MANIMARAN M

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

#அNEETதி : நீட் தேர்வினால் மதுரை மாணவி தற்கொலை… அடுத்தடுத்த மரணத்தால் கொதிப்பில் தமிழகம்…

NEWSKADAI

தாலி சங்கலிக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி… ஹாஸ்பிட்டலில் அவிழ்த்துவிட்ட புளூகு மூட்டைகள்…!

THAVAMANI NATARAJAN

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M