Newskadai.com
தமிழ்நாடு

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கே இந்த நிலையா?… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!

Nilgiris district collector
Share this:

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யா பெயரில் போலியான இ-மெயில் கணக்கு ஒன்றை உருவாக்கி மோசடி செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று நீலகிரி மாவட்ட அரசு அதிகாரிகளின் மெயிலுக்கு, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் மெயில் ஒன்று வந்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து புதிய மெயில் ஐடியில் நம்பகத்தன்மையற்ற தகவல் ஒன்று பகிரப்பட்டுள்ளது என்பதை கவனித்த அரசு பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

Money laundering மேலும் படிக்க:http://அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்… திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

மெயிலில் இருந்து வரப்பட்ட செய்தியானது, அமேசான் கிப்ட் கூப்பனை உங்களுக்கு அனுப்பியுள்ளேன், தற்பேது தன்னிடம் பணம் இல்லாததால் நீங்கள் பணம் கொடுத்து கிப்ட் கூப்பனை வாங்குமாறும், பிறகு நான் அந்த பணத்தை கொடுத்து உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதாகவும் மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்ற அதிகாரிகளுக்கு தனது பெயரில் இருந்து பொய்யான தகவல் வந்துள்ளதை எச்சரித்து, காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

Money laundering இது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பெயரில் மின்னஞ்சல் மோசடியும், வேலூர் மாவட்ட போதைபொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் பெயரில் போலி முகநூல் கணக்கு மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளை குறிவைத்து மோசடி செய்ய முயற்சித்து வருபவர்களை விரைவில் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடந்தி வருகிறார்கள்.


Share this:

Related posts

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

உலக பிரசித்திப் பெற்ற கோயில் திருவிழா…பக்தர்கள் பங்கேற்க தடை..!! மாவட்ட எஸ்.பி.அறிவிப்பு…

MANIMARAN M

சுனாமி அறிகுறியா?… இரு தினங்களாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி…!!

MANIMARAN M

6 வருடங்களாக அலைக்கழிப்பு… மேட்டூர் தாசில்தார் காலில் விழுந்து கதறிய அபலை பெண்…!

THAVAMANI NATARAJAN